Take a fresh look at your lifestyle.

பெற்றோரை காப்பாற்ற உதவுங்கள் ஜெயம் ரவி ஜோடியாக நடித்த நடிகையின் உருக்கமான வேண்டுகோள்

253

கன்னட நடிகை சம்யுக்தா ஹெக்டே. ஏராளமான கன்னட படங்களில் நடித்து வருகிறார். தமிழில் கோமாளி, வாட்ச்மேன், பப்பி படங்களில் நடித்தார். பெங்களூரில் வசித்து வருகிறார். தற்போது அவரது பெற்றோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களை காப்பாற்ற ரெம்டெசிவிர் மருந்து தாருங்கள் என்று உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் கூறியிருப்பதாவது: எனது பெற்றோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் முதியவர்கள் என்பதால் மருத்துவமனைக்கு செல்ல அச்சப்படுகிறார்கள். அதனால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்போது அவர்கள் உயிரை காப்பாற்ற ரெம்டெசிவிர் மருந்து வேண்டும். நான் தெரிந்தவர்கள், நண்பர்கள் எல்லோரிடமும் கேட்டுவிட்டேன். எங்கும் கிடைக்கவில்லை. எனக்கு 6 டோஸ் மருந்து வேண்டும். வாய்ப்புள்ளவர்கள் எனக்கு உதவுங்கள்.

இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.