Take a fresh look at your lifestyle.

டாக்டர் D. அருளானந்து வழங்கும் ஃபிலிம்மேக்கர் ஹரி ஹரன் ராம் இயக்கத்தில் நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் புதிய படம்!

86

சென்னை:

விஷன் சினிமா ஹவுஸ்ஸின் ரிச் இந்தியா டாக்டர் D. அருளானந்து தயாரிப்பில் நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று (30.10.2022) தொடங்கியது. இந்த விழாவில் தமிழ்த் திரையுலகின் முக்கிய பிரமுகர்கள், நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நட்பின் அடிப்படையில் படத்தின் முதல் ஷாட்டை க்ளாப் போர்ட் அடித்து தொடங்கி வைத்தார்.

நடிகர் ரியோ ராஜ் கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்திற்கும் மேலாக இந்தப் படத்திற்காக நீண்ட தலைமுடி மற்றும் தாடியுடன் அர்ப்பணிப்புடன் வலம் வருகிறார். இந்தக் கதை உண்மையான அன்பு மற்றும் பல உணர்ச்சிகரமான தருணங்களை உள்ளடக்கியது ஆகும். இந்தப் படம் ஆண் மற்றும் பெண் இடையேயான காதல் மற்றும் உறவுகளில் மட்டும் கவனம் குவிக்காமல் பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு இடையேயான எல்லையற்ற அன்பு குறித்தும் பேசுகிறது. நல்ல உணர்வைத் தரக்கூடிய வகையிலான அன்பு, குடும்பங்களின் பாசம் என இளைஞர்களும் பெற்றோர்களும் நிச்சயம் சேர்ந்து திரையரங்குகளில் பார்க்கக் கூடிய வகையிலான படமாகவும் திரும்பி போகும் போது நல்ல நினைவுகளைத் தரக்கூடியப் படமாகவும் இது அமையும்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தினை விஷன் சினிமா ஹவுஸ்ஸின் டாக்டர். டி. அருளானந்து (ரிச் இந்தியா டாக்டர் டி. அருளானந்து என்றும் அறியப்படுகிறார்) தயாரித்திருக்கிறார். ‘மீசைய முறுக்கு’ படத்தில் உதவி இயக்குநராகவும், ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் இணை இயக்குநராகவும் பணியாற்றிய ஹரி ஹரன் ராம் இந்தப் படத்தை இயக்குகிறார். ரியோ ராஜ் கதையின் நாயகனாக நடிக்க மாளவிகா மனோஜ் மற்றும் பவ்யா ட்ரிகா படத்தின் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். சார்லி, ’கோலமாவு கோகிலா’ படப்புகழ் அன்பு தாசன், ‘கனா காணும் காலங்கள்’ புகழ் ஏகன், எருமசாணி யூடியூப் புகழ் கெவின் ஃபெல்சன், ‘கோமாளி’, ‘வாத்தி’ படப்புகழ் ப்ரவீனா மற்றும் பலர் இந்தப் படத்தின் நடிகர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்:

ஒளிப்பதிவு: ‘கண்மணி அன்போடு காதலன்’ இணையத்தொடர் புகழ் KG விக்னேஷ்,

எடிட்டிங்: ‘கண்மணி அன்போடு காதலன்’ இணையத்தொடர் புகழ் KG வருண்,

கலை:  ’சத்யா’, ‘பீஸ்ட்’ படங்களில் அசோசியேட்டாக பணிபுரிந்த ABR,

இசை: ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ மற்றும் ‘பேச்சுலர்’ படப்புகழ் சித்து குமார்.