Take a fresh look at your lifestyle.

‘கடலோர கவிதைகள்’ ரேகா நடிக்கும் ‘மிரியம்மா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

310
CHENNAI:
அறிமுக இயக்குநர் மாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் ‘மிரியம்மா’. இதில் மூத்த நடிகை ரேகா, எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷிக், மாலதி நாராயண் ஆகியோர் நடிக்கிறார்கள். ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கான பாடல்களுக்கு ஏ. ஆர். ரெஹைனா இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை கமல் கவனிக்க, கலை இயக்க பணிகளை ரஞ்சித் மேற்கொண்டிருக்கிறார். தாய்மை அனுபவத்தை ஏற்க தயாராகும் மூத்த பெண்மணி ஒருவரின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ சாய் புரொடக்ஷன் எனும் பட நிறுவனம் தயாரித்திருக்கிறது.
நடிகை ரேகா அழுத்தமான வேடத்தில் நடிப்பதால், ‘மிரியம்மா’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடத்தில் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் ‘மிரியம்மா’ படத்தில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகை ரேகாவின் தோற்றம்.. அர்த்தமுள்ளதாக இருப்பதால் ரசிகர்களிடத்தில் படத்தைப் பற்றிய ஆவலை தூண்டி இருக்கிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” பெண்ணாக பிறந்து ஒவ்வொருவரும் பூப்பெய்திய பிறகு தாய்மை அடைய வேண்டும் என விரும்புவர். அவர்களின் வாழ்க்கைக்கு பற்றுக்கோடான இவ்விசயத்தில், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்மணி ஒருவர் தாய்மை அடைய விரும்புகிறார். செயற்கை முறை கருவூட்டல் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் அவர் சந்திக்கும் சவால்கள் தான் இப்படத்தின் கதை. ” என்றார்.