Take a fresh look at your lifestyle.

ரியோவின் ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தைத் தயாரிக்கும் யுவன்!

சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் ரியோ ராஜ். நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கி உள்ளார். அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். பிளான் பண்ணி பண்ணனும், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, ஜோ போன்ற படங்களில் நடித்துள்ளார் ரியோ ராஜ்.

அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஜோ’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிக்க உள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கும் இந்தப் படத்திற்கு, ‘ஸ்வீட் ஹார்ட்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் கோபிகா ரமேஷ் நாயகியாக நடிக்கிறார்.

படத்தில் ரெடின் கிங்ஸ்லி, அருணாச்சலம், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதுடன் திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். யுவன் ஏற்கனவே ‘பியார் பிரேமா காதல்’, ‘ஹை ஆன் லவ்’, விஜய் சேதுபதி நடித்த ‘மாமனிதன்’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.