‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, சித்தா படங்களின் இயக்குநரான எஸ். யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வீர தீர சூரன் – பார்ட் 2’ படத்தில் சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன், சித்திக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஜி. கே. பிரசன்னா மேற்கொள்ள, கலை இயக்கத்தை சி. எஸ். பாலச்சந்தர் கவனித்திருக்கிறார்.
ஆக்சன் திரில்லர் என்டர்டெய்னராக தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஹெச்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.
‘வீர தீர சூரன் பார்ட் – 2’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்பப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
‘வீர தீர சூரன் பார்ட் – 2’ படத்தின் கிளிம்ப்ஸ் ஏற்கனவே வெளியாகி பதினான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்த நிலையில், இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
டீசரில் இடம்பெற்றுள்ள காட்சிகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை வியப்பில் ஆழ்த்தி இருப்பதால், படத்தைப் பற்றிய ஆர்வத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.
சீயான் விக்ரம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தப் படம், ஜனவரியில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.