Take a fresh look at your lifestyle.

சத்யராஜுடன் சரிசமமாக நடிக்க ஆசை!

- விஜய் சேதுபதி

நடிகர் சத்யராஜூக்கு சரிக்கு சமமாக ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என ஆசைப்படுவதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரித்து கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் படம் சிங்கப்பூர் சலூன். இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டை சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்.ஜே.பாலாஜி, சத்யராஜ், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய விஜய்சேதுபதி, சத்யராஜ் மிகப்பெரிய நடிகர் என்றும் அவரது நடிப்பை மிகவும் ரசித்துள்ளேன் என்றும் தெரிவித்தார். அவருக்கு சரிக்கு சமமாக ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என ஆசையாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

– தேஜேஷ்