வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘தி கோட்’ படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தை ஹெச். வினோத் இயக்குகிறார். விஜய்யின் 69-வது படம் இது.
இந்தப் படத்தின் கதையில் முதலில் கமல்ஹாசன் நடிக்க இருந்ததாகவும் அவரின் 233-வது படமாக இது உருவாக இருந்ததாகவும் சில காரணங்களால் அது தள்ளிப் போனதால் விஜய் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் விஜய்யின் இந்தப் படத்தில் கமல்ஹாசன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
கமல்ஹாசன், விஜய் இணைந்து முதல் முறையாக நடித்தால் அந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரிக்கும் என்கிறார்கள் ரசிகர்கள்.
– நன்றி: இந்து தமிழ் திசை.