ஹெச். வினோத் – விஜய் கூட்டணியில் உருவாகும் ‘விஜய் 69’ படத்தில் முதல் நடிகராக பாபி தியோல் இணைந்ததாக அறிவிப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து, பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ ஆகியோர் இப்படத்தில் இருப்பதை அறிவித்தனர்.
தொடர்ந்து, இப்படத்தில் இயக்குநரும் நடிகருமான கௌதம் வாசுதேவ மேனன் இணைந்ததாக படக்குழு அறிவித்தது.
இந்த நிலையில், ‘விஜய் 69’ படத்தில் நரேன், பிரியாமணி ஆகியோர் இணைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரடக்ஷன்ஸ் போஸ்டர் வெளியிட்டுத் தெரிவித்துள்ளது.
விஜய்யின் கடைசிப் படமாக இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ள இந்தப் படம் 2025-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகுமென படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. கேவிஎன் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.