Take a fresh look at your lifestyle.

பொங்கலுக்கு வெளியாகும் அஜித்தின் ‘விடாமுயற்சி‘!

உச்ச நட்சத்திரங்கள் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் வழக்கமாக நடிப்பதில்லை. இந்த ஆண்டு, விசேஷம், இது வித்தியாசமாக ரஜினி, கமல், அஜித் ஆகிய மூன்று மெகா ஸ்டார்களும் ஒரே சமயத்தில் 2 படங்களில் நடிக்க நேரிட்டது.

ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ படத்தின் நடித்தபோதே ‘கூலி’ படத்தில் நடிக்க தேதிகள் கொடுத்தார்.

கமல்ஹாசன், இந்தியன் இரண்டாம் பாகம் மற்றும் மூன்றாம் பாகம் ‘ஷுட்டிங்’ நடந்த நேரத்தில் மணிரத்னம் இயக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

அஜித் கதையும் அதுவே. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் நடித்தது போல, இந்த ஆண்டில் அவர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ ஆதிக் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ என இரண்டு படங்களில் நடித்தார்.

‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு தொடங்கும் சமயத்திலேயே பொங்கல் வெளியீடு என அறிவிக்கப்பட்டது.

ஆனால் அதன் ‘ஷுட்டிங்’ முடியவில்லை. எனினும் அந்தப் படத்துக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட ‘விடா முயற்சி’ படப்பிடிப்பு முடிந்து விட்டது.

இந்தப் படத்தில் அஜித்துடன், த்ரிஷா, ரெஜினா கஸன்ட்ரா, அர்ஜூன், நிகில் நாயர், ஆரவ், சஞ்சய் சாரா, தசரதி என பலர் நடித்துள்ளனர். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுப்ரீம் சுந்தர் ஸ்டண்ட் காட்சிகளை அமைத்துள்ளார்.

அனிருத் இசை. ‘விடாமுயற்சி’ படம் எப்போது ரிலீஸ்? என்ற கேள்வி, அஜித் ரசிகர்களை தூங்க விடாமல் செய்துள்ள நிலையில், இந்தப் படம் குறித்து ‘அப்டேட்’ ஒன்றை வெளியிட்டுள்ளார், அனிருத்.

‘விடாமுயற்சி பொங்கல் திருநாளில் வெளியாகும்’ என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். எனினும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து இது குறித்து செய்திகள் ஏதும் வரவில்லை.

அப்படி என்றால் ‘குட் பேட் அக்லி’? டிசம்பர் மாதம் வெளியாகலாம்.

-பாப்பாங்குளம் பாரதி.

#அஜித் #Ajith #விடாமுயற்சி #Vidamuyarchi #பொங்கல் #Pongal #ரிலீஸ் #Release #த்ரிஷா #Trisha #ரெஜினா_கஸன்ட்ரா #Regina_Cassandra #அர்ஜூன் #Arjun #நிகில்_நாயர் #Nikil_nair #அனிருத் #Anirudh