Take a fresh look at your lifestyle.

வதந்தி சீசன் 2 – டிரைலர் வெளியீடு!

ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ள எட்டு எபிசோட்கள் கொண்ட தொடர், புஷ்கர் மற்றும் காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாகவும், வால்வாட்சர் ஃபிலிம்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது.

குற்றவுணர்வு, ரகசியங்கள், வதந்திகள் மற்றும் மீண்டுவரும் உணர்வு ஆகியவற்றை மையமாகக் கொண்ட பரபரப்பான மர்மக் கதையாக வதந்தி சீசன் 2 உருவாகியுள்ளது.

மதுரையை கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த சஸ்பென்ஸ் திரில்லர் சீரிஸில் சசிகுமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அவருடன் யஷ்வந்த், அனகா மாருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வரும் ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும் இந்தி டப்பிங் பதிப்புகளிலும், ஆங்கிலம் உள்ளிட்ட 15 மொழிகளில் சப்டைட்டில்களுடன், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட தனது தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘வதந்தி’யின் அடுத்த அத்தியாயமான ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ யின் விறுவிறுப்பான டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த டிரெய்லர், ஒரு பதற்றம் நிறைந்த புதிய விசாரணைக்குள் பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது. வழக்கின் உண்மையை நெருங்கும் ஒவ்வொரு அடியிலும், அதைவிட இருண்ட மர்மங்கள் வெளிப்படத் தொடங்குகின்றன. மதுரையின் செழுமையான கலாச்சாரப் பின்னணியில், பாரம்பரியமும் புலனாய்வும், ஜல்லிக்கட்டு திருவிழாவின் தீவிரமான சூழலில் கதை நகர்கிறது.

தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகள் நடைபெறும் இடத்தில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்படுவது, நேர்மையும் விடாமுயற்சியும் கொண்ட காவல் அதிகாரியான SI மூசா ரஸாவை, ‘மணி’ என்ற மர்மமான கைதியை பற்றித் தேடும் விசாரணைக்குக் கொண்டு செல்கிறது.

ஆரம்பத்தில் சாதாரண கொலை வழக்காகத் தோன்றும் இந்த விசாரணை, பின்னர் பொதுமக்களின் பார்வை, ஊடக பரபரப்பு, அரசியல் மற்றும் மனித பலவீனங்கள் ஆகியவற்றுடன் மோதும் சிக்கலான பயணமாக மாறுகிறது. மூசா உண்மையைத் தேடி ஆழமாகச் செல்லும் போது, புதைக்கப்பட்டிருந்த பல ரகசியங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிப்படுகின்றன.

குற்றவுணர்வு, ரகசியங்கள், வதந்திகள் மற்றும் மீட்பு ஆகியவற்றை மையமாகக் கொண்ட இந்த பரபரப்பான கதை, உண்மை என்பது முதலில் தோன்றுவது போல எளிதானதல்ல என்பதை உணர்த்துகிறது.