Take a fresh look at your lifestyle.

விஜய் பிறந்த நாளில் ரீ-ரிலீஸாகும் ‘துப்பாக்கி’, ‘போக்கிரி’!

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வரும் ஜூன் 22-ம் தேதி தன்னுடைய 50-வது பிறந்தநாளைக் கொண்டாட உள்ளார். இந்நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அவரது நடிப்பில் வெளியான ‘துப்பாக்கி’ படம் வரும் ஜூன் 21-ம் தேதி தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட உள்ளது.

விஜய் கரியரில் ரூ.100 கோடி வசூலித்த முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. வித்யூத் ஜம்வால் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.

இதேபோல விஜய் நடிப்பில் பிரபு தேவா இயக்கத்தில் வெளியான ‘போக்கிரி’ திரைப்படமும் 21-ம் தேதி ரீ-ரிலீஸாகிறது.

முன்னதாக, தரணி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வரவேற்பைப் பெற்ற ‘கில்லி’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. ரசிகர்களிடையே பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து படம் ரூ.25 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்தது.