Take a fresh look at your lifestyle.

த்ரிஷா நடித்த ‘தி ரோட்’ திரைப்பட டிரெய்லர் வெளியீடு!

நடிகை த்ரிஷா நடித்த ‘THE ROAD’ தி ரோட், படத்தின் டிரெய்லர் வெளியானது. அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் திரிஷா முதன்மை பாத்திரத்திலும் டான்சிங் ரோஸ் சபீர், சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்.எஸ். பாஸ்கர், வேலராமமூர்த்தி, விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கும் திரைப்படம் ‘தி ரோட்’.

இப்படத்திற்கு சாம்.C.S இசையமைகிறார்.

‘தி ரோட்’ திரைப்படம் மதுரையில் நடந்த சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படத்திற்காக நடிகை திரிஷா மற்றும் படக்குழுவினர் அனைவரும் மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள மலைகள், காடுகள் பகுதிக்கு சென்று படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது. இதனிடையே படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

https://youtu.be/U-Jf7EVwx_M?si=OWIjv5iXhOXXN93F

இத்திரைப்படம் அக்டோபர் மாதம் 6-ம் தேதி திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

– தேஜேஷ்