Take a fresh look at your lifestyle.

‘கோட்’ – வெளிநாட்டு உரிமையைப் பெற்ற ஹம்சினி நிறுவனம்!

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கோட்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்தப் படத்தின் பிசினஸ் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் வெளிநாட்டு உரிமையை குறிப்பாக வட அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உரிமையை ஹம்சினி என்டர்டைன்மென்ட் என்ற நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் ஏற்கனவே விஜய் நடித்த ‘மெர்சல்’, ‘சர்கார்’, ‘மாஸ்டர்’, ‘பீஸ்ட்’ மற்றும் ‘லியோ’ ஆகிய ஐந்து படங்களை வெளியிட்டுள்ள நிலையில் தற்போது ஆறாவது முறையாக `கோட்’ படத்தையும் வெளியிட உள்ளது.

மேலும் இந்தப் படத்தின் வட அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உரிமை மிகப்பெரிய தொகைக்கு விற்பனை ஆகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, வைபவ், பிரேம்ஜி, யுகேந்திரன், பார்வதி நாயர், விடிவி கணேஷ், யோகி பாபு உட்பட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

– தேஜேஷ்