Take a fresh look at your lifestyle.

சுவாரஸ்யமான நகைச்சுவைத் தொடராக வெளிவரவுள்ள ‘தலைவெட்டியான் பாளையம்’!

பிரைம் வீடியோவின் புதிய அசல் நகைச்சுவை இணையத் தொடரான ‘தலைவெட்டியான் பாளையம்’ செப்டம்பர் 20 தேதி அன்று பிரத்யேகமாக வெளியாகிறது.

எட்டு எபிசோட்கள் அடங்கிய இந்தத் தொடரில், அபிஷேக் குமார், சேத்தன் கடம்பி, தேவதர்ஷினி, நியாதி ஆனந்த் சாமி மற்றும் பால்ராஜ் ஆகிய தலை சிறந்த நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர்.

பால குமாரன் முருகேசன் எழுத்தில், நாகா இயக்கத்தில் உருவான இந்த தலைவெட்டியான் பாளையம் தமிழ் ஒரிஜினல் தொடர், தி வைரல் ஃபீவர் (TVF) நிறுவனம் தயாரித்திருக்கிறது.

தலைவெட்டியான் பாளையம் இந்தியா மற்றும், உலகம் முழுவதிலும் 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் செப்டம்பர் 20 அன்று பிரத்தியேகமாக திரையிடப்பட உள்ளது.

தன் மனதுக்கு மிகவும் பிடித்த வசதியான சூழலை விட்டுச் செல்ல மனமில்லாத, சென்னையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான சித்தார்த் (அபிஷேக் குமார்) வேறு வழியின்றி தொலைதூரத்திலுள்ள கிராமமான தலைவெட்டியான் பாளையத்தில் ஒரு செயலாளர் பணியில் சேர்வதிலிருந்து இந்த நகைச்சுவை இணையத் தொடர், அவரைப் பின் தொடர்கிறது வித்தியாசமான கிராமப்புற வாழ்க்கை மற்றும் அதன் கிராமவாசிகளின் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கையால் பாதிக்கப்படுகிறார். இதனால் ஏற்படும் சுவராசியமான திடீர் திருப்பங்களை நகைச்சுவையான சூழல் விவரிக்கிறது.