Take a fresh look at your lifestyle.

த்ரில்லர் கதையாக உருவாகும் ரஜினியின் புதுப் படம்!

‘சூப்ப ர்ஸ்டார்’ ரஜினிகாந்த் இப்போது ‘ஜெயிலர்-2’ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, அவர் நடிக்கும் புதிய படத்தை, கமலின் ‘ராஜ் கமல் பிலிம் இண்டர் நேஷனல்’ நிறுவனம் தயாரிக்கிறது.

‘டான்’ பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார்.  இது ரஜினியின் 173 வது படம். அனிருத் இசை அமைக்கிறார்.

ஜெயிலர்-2 படப்பிடிப்பு முடிந்ததும், ‘தலைவர் 173’ ஷுட்டிங் தொடங்குகிறது. அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளில் படத்தை வெளியிடத் திட்டம்.

இந்தப் படம் ‘சஸ்பென்ஸ், த்ரில்லர்’ படமாக உருவாகிறது. 2022 ஆம் ஆண்டு வெளியான ‘தி அவுட்பிட்’ என்ற ஹாலிவுட் படத்தின் கதையை தழுவி எடுக்கப்படுவதாக தகவல்.

அந்த ஹாலிவுட் படத்தை டைரக்டு செய்தவர் கிரஹாம் மூர். ஹீரோவாக மார்க் ரிலன்ஸ் நடித்திருந்தார். படத்தில் மொத்தமே 9 கேரக்டர்கள். 1970 ஆம் ஆண்டு கால கட்டத்தில் நடப்பது போல் கதைக்களம் உருவாக்கப்பட்டிருந்தது

‘தி அவுட்பிட்’ கதை என்ன?

சிகாகோ நகரின் ஒதுக்குப்புறத்தில் ஒரு தையல் கடை. அங்கு செல்வந்தர்கள் பயன்படுத்தும் உயர் ரக ஆடைகளும், கோட்டுகளும் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

கேங்க் ஸ்டர்கள், தங்கள் தொழிலுக்கு அந்த கடையை பயன்படுத்தி கொள்கிறார்கள். கேங்க் ஸ்டரின் மகனை, தையல் கடையில் வேலை பார்க்கும் ஊழியர் சுட்டுக்கொன்று விடுகிறார். உடலை கடையில் மறைத்து வைக்கிறார்.

கேங்கஸ்டருக்கு இது தெரிய வருகிறது. கடையின் உரிமையாளரான ஹீரோ மீது கேங்க்ஸ்டர் சந்தேகம் அடைகிறார்.

ஹீரோவான தையல் கடைக்காரர், கேங்க்ஸ்டரிடம் இருந்து தப்பிக்க போராடுகிறார். இதுவே மூலக்கதை.

தையல்கடையில் ஆரம்பித்து, தையல்கடையிலேயே படம் முடிகிறது. படம் மிகமிக மெதுவாகவே நகரும்.

இதனை சிபி சக்கரவர்த்தி, எப்படி தமிழ்ப் படுத்துகிறார் என பார்க்கப் பொறுத்திருப்போம்.

– பாப்பாங்குளம் பாரதி.