ஜெய்பீம் பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்தின் 170-வது திரைப்படம் உருவாக உள்ளது. ஜெய்லரின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு உருவாக உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் இன்று பூஜையுடன் தொடங்கியது.

