தமிழில் காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் 2008-ல் அறிமுகமானவர் நடிகை சுனைனா. தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் பல படங்கள் நடித்துள்ளார்.
தெறி படத்தில் நடிகர் விஜய்யுடன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நேரம், பிரேமம் படத்தில் துணைக் கதாபாத்திரமாக நடித்த அனந்த் நாக் உடன் சுனைனா நடித்த ‘ரெஜினா’ கலவையான விமர்சனங்களைப் பெற்றன.
நிலா நிலா ஓடி வா, பிங்கர்டிப், சதுரங்கம், மீட் க்யூட், இன்ஸ்பெக்டர் ரிஷி ஆகிய இணையத் தொடர்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் தனுஷுடன் நடிப்பது குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு நன்றித் தெரிவித்து அதை உறுதிப்படுத்தியுள்ளார்.

எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவில், “எப்போதும் புன்னகைத்துக் கொண்டே இருங்கள்.
அதில் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். ‘சேகர் கம்முலா’ படத்துக்கு வாழ்த்துகள்.
அவர் வலுவான பெண்கள் கதாபாத்திரத்தை காட்சிப்படுத்தக் கூடியவர். இது மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். வாழ்த்துகள்” எனக் கூறியிருந்தார்.
இந்தப் பதிவுக்கு நடிகை சுனைனா நன்றித் தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ் தற்போது குபேரா படத்தில் நடிக்கிறார். அதைத் தொடர்ந்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தினை இயக்குகிறார். அடுத்து இளையராஜா பயோபிக்கில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.