Take a fresh look at your lifestyle.

வீட்டில் முடங்கிய நடிகர் ஸ்ரீகாந்த்!

‘சாக்லெட் பேபி’ என அழைக்கப்பட்டவர் நடிகர் ஸ்ரீகாந்த்.

அழகும், அப்பாவி முகமும் அவரது பிரதான அடையாளங்கள்.

சினிமாவில் அறிமுகமாகி 23 ஆண்டுகளைக் கடந்துள்ள ஸ்ரீகாந்த், இப்போது தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் செகண்ட் ஹீரோ வேடத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் போதை மருந்து பயன்படுத்திய குற்றத்துக்காக சிறைக்குச் சென்று ஜாமீனில் வெளியே வந்தார் ஸ்ரீகாந்த். குற்ற உணர்வு, தயக்கம் காரணமாக சினிமா நிகழ்ச்சி மற்றும் எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்வதில்லை.

சுருக்கமாக,  சொன்னால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்.

மு.மாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், தேஜு அஷ்வினி, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ படத்தில் முக்கிய வேடத்தில் ஸ்ரீகாந்த் நடித்துள்ளார். அவர் ஜோடியாக பிந்துமாதவி நடிக்கிறார்.

இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா மற்றும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். ஆனால், ஸ்ரீகாந்த் மட்டும் கலந்து கொள்ளவில்லை.

விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடுமே என்ற குற்ற உணர்ச்சியே இதன் காரணம்.

விடுபட்டு வாருங்க!

– பாப்பாங்குளம் பாரதி