Take a fresh look at your lifestyle.

கலை இயக்குநராகும் மிலனின் மனைவி!

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் தன்னுடைய 62-வது திரைப்படமான விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

விடாமுயற்சி படப்பிடிப்பானது அஜர்பைஜானில் கடந்த அக்டோபர் 4-ம் தேதி தொடங்கியது. இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க திரிஷா மற்றும் துணை நடிகையாக ப்ரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகி உள்ளனர்.

கடந்த அக்டோபர் 4-ம் தேதி அஜர்பைஜானில் தொடங்கிய விடாமுயற்சி படப்பிடிப்பு தொடர்ந்து 100 நாட்கள் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 15-ம் தேதி விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்துக்கு செல்லும் வழியில் கலை இயக்குநர் மிலனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

தற்போது மிலனுக்கு பதிலாக அவரது மனைவி மரியா மெர்லின், விடாமுயற்சியின் கலை பணிகளை மேற்கொள்வார் என தகவல் வெளியாகி உள்ளது.

முழுக்க முழுக்க ஹாலிவுட் தரத்தில் விடாமுயற்சி படம் உருவாவதால் சென்னையில் படப்பிடிப்பை நடத்த வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

இதனால் படத்தின் அனைத்து காட்சிகளும் வெளிநாட்டிலேயே படமாக்க உள்ளனர்‌. இருந்தபோதிலும் படத்தின் சில காட்சிகளை படமாக்க மும்பை செல்லவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

– தேஜேஷ்