Take a fresh look at your lifestyle.

சாதனை செய்த திருப்தி இருக்கு!

பின்னணிப் பாடகி பி. சுசீலா உருக்கம்

மென்குரலால் நம்மை தாலாட்டும் பின்னணிப் பாடகி பி.சுசீலாவை திருவாரூரில் கடந்த 2004 ஆம் ஆண்டு சந்தித்தேன்.

****

உன்னைக் காணாத கண்ணும் கண் அல்ல… அப்டீங்கிற மாதிரி, பி.சுசீலாவின் பாடலைக் கேட்காத காதும், காதல்லன்னு சொல்லலாம்.

எத்தனை ஆயிரம் பாடல்கள்… பாடலின் சூழலுக்கேற்ப குரலின் நளினம் அல்லது தன்மையை வார்த்தைகளில் வர்ணித்துவிட முடியாது. பயணக் களைப்பில் இருந்ததால் போட்டா எடுக்க அனுமதிக்கவில்லை.

நம் கேள்விகளுக்கு சுசீலா அவர்களின் குரல்…

இசை உலகிற்கு வர பாரம்பரியம் அவசியமா?

தேவைன்னும் சொல்லலாம். கட்டாயம் இல்ல. எங்கப்பா வீணை வித்வான். எங்க வீட்டுல எல்லாரும் பாடுவாங்க. ஆனா வேற யாரும் சினிமாவுக்கு வரல.

தமிழிசை, கர்நாடக இசை?

கர்நாடக இசையில ராகத்தை கரெக்டா பாடணும். ஆனா சினிமாவுல பாவத்துக்குத்தான் அதிக முக்கியத்துவம்.

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல…(பாடுகிறார்) பாடலைக் கேட்கும்போது, கே.ஆர். விஜயாவும் தெரிவாங்க. அதே மாதிரிதான் எல்லா பாட்டும்.. இங்க பாவம்தான் முக்கியம்.

நீங்க இசை உலகுக்கு வந்த அந்தக் காலம்?

சினிமாவுக்கு நான் பாட வந்தது ஒரு நல்ல சீசன்தான் சொல்லணும். அவர்களுக்கு எந்த மாதிரியான பாடல் வேண்டுமோ, அதை என்னை வைத்து பாட வைத்தனர்.

எல்லா விதமான பாடல்களையும் பாடியிருக்கேன். அந்த வாய்ப்பு வேறு யாருக்கும் கிடைக்காது. நானும் சில எதிர்ப்புகளை தாண்டி வந்தவள்தான்.

சாதனை செய்து இருக்கிறோம் என்ற திருப்தி உங்களுக்குள் இருக்கிறதா?

நிறைவாக இருக்கிறது.

சந்திப்பு – மணா