தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் சித்தார்த். இவர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ‘சித்தா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதையடுத்து வெளியான ‘இந்தியன் 2’ திரைப்படம் ரசிகர்களிடையே மோசமான விமர்சனங்களைப் பெற்றது.
‘சித்தா’ படத்துக்குப் பிறகு நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தேர்தெடுத்து வருகிறார் சித்தார்த்.
தற்போது காதல் கலந்த ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு ‘மிஸ் யூ’ எனப் பெயரிட்டுள்ளது படக்குழு.
ராஜசேகரன் இயக்கும் இந்தப் படத்தை 7 மைல்ஸ் பெர் செகண்டு புரடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
தமிழகமெங்கும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியீடுகிறது. இத்திரைப்படத்தை உலகமெங்கும் ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் வெளியிடுகிறது.
இந்தப் படம் நவம்பர் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தெலுங்கு நடிகை ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஒரு இளைஞன் தனக்கு பிடிக்காத ஒரு பெண்ணை, தீவிரமாகக் காதலிக்கிறான். ஏன்? எப்படி? எதற்கு? தனக்குப் பிடிக்கவில்லை எனும்போதும், நாயகன் ஏன் காதலிக்கிறான் எனும் கேள்விக்குப்பின்னால் உள்ள சுவாரஸ்யம்தான் இந்தப் படத்தின் கதை.
ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்தில் 8 பாடல்களை இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை உரிமையை பெரும் விலைக்கு டி சீரிஸ் பெற்றுள்ளது. இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் பெற்றுள்ளது.