Take a fresh look at your lifestyle.

மீண்டும் இணையும் ’சித்தா’ படக்குழு!

எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த் தயாரித்து, நடித்த ‘சித்தா’ படம் கடந்த ஆண்டில் வெளியாகி ‘ஹிட்’ அடித்தது. குழந்தைகள் மீதான பாலியல் பிரச்சினைகளுக்கு சாட்டையடியாக வெளியான இப்படம் அனைவரது பாராட்டையும் பெற்றது.

‘சித்தா’ படத்துக்கு தொடர் விருதுகள் கிடைத்து வருகிறது. இந்த நிலையில், ‘சித்தா’ படத்தின் 2-ம் பாகத்தை எடுக்கும் முயற்சிகளும் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பேசிய நடிகர் சித்தார்த், ‘சித்தா’ படம் எங்கள் தயாரிப்புக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. சமீபத்தில் கூட ‘சித்தா’ படத்துக்கு சிறந்த படத்துக்கான பிலிம் பேர் விருது கிடைத்துள்ளது. 

சிறந்த நடிகர், நடிகை, துணை நடிகை, இயக்குநர் என 7 பிரிவுகளிலும் விருதுகள் கிடைத்துள்ளன. இது எங்கள் அனைவருக்கும் பெருமை அளிக்கிறது.

இந்தப் படத்தின் 2-ம் பாகம் தயாராகுமா? என்று கேட்கிறார்கள். அதை காலம்தான் நிர்ணயிக்கும். ஆனால் தரமான படைப்புகளைத் தொடர்ந்து தயாரிப்போம். அது உறுதி” என்றார்.

படத்தின் இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் பேசியபோது, “மீண்டும் எங்கள் கூட்டணி அமைந்தால் பெரும் மகிழ்ச்சி தான். அதற்கான சூழல் அமையவேண்டும். அது ரசிகர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை கொடுக்கும்” என்றார்.