Take a fresh look at your lifestyle.

விஜயகாந்தை வழியைப் பின்பற்றும் சண்முக பாண்டியன்!

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் இளையமகன் சன்முக பாண்டியன், தந்தையைப் போன்று சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

அவரது நடிப்பில் வெளியான முதல் படமான ‘சகாப்தம்’ பெரிய அளவில் போகவில்லை. அதனைத் தொடர்ந்து, ‘மதுரை வீரன்’ என்ற படத்தில் நடித்தார். அதுவும் பேசப்படவில்லை.

தந்தை விஜயகாந்துடன் இணைந்து ‘தமிழன் என்று சொல்’ என்ற படத்தில் நடித்து வந்தார் சண்முக பாண்டியன். விஜயகாந்தின் மறைவால் அந்தப் படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ‘படைத்தலைவன்’ என்ற படத்தில் சண்முக பாண்டியன் இப்போது நடித்து வருகிறார். புதுமுக இயக்குநர் அன்பு டைரக்ட் செய்யும் இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

காட்டையும், காட்டில் வாழும் மனிதர்களையும் மையமாகக் கொண்டு இதன் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளதால், வனப்பகுதியில் முழுக்க, முழுக்க ஷுட்டிங் நடந்துள்ளது.

இயக்குநர்கள் கஸ்தூரி ராஜா, ஏ.வெங்கடேஷ், மற்றும் முனீஸ்காந்த் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்தில், சண்முக பாண்டியன் ஜோடியாக யாமினி சுந்தர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

‘டினோசரஸ்’, ‘நெஞ்சுக்கு நீதி’ ஆகியப் படங்களில் நடித்துள்ள யாமினிக்கு, ‘படைத்தலைவன்’ படத்தில் சண்டைக் காட்சிகளும் உள்ளதாம்.

சத்தமில்லாமல் முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்தப் படத்தில் மொத்தம் ஐந்து சண்டைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

விஜயகாந்தையே மிஞ்சும் அளவிற்கு சண்முக பாண்டியன் சண்டைக் காட்சிகளில் அசத்தி இருப்பதாக தகவல். ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தில் ‘படைத்தலைவன் ‘ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

-பாப்பாங்குளம் பாரதி.