மிஸ்ட்ரி, த்ரில்லர், காதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் ‘சில நொடிகளில்’ திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாகி பார்வையாளர்களை பரவசப்படுத்தத் தயாராக உள்ளது.
வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி – ராஜ் வரதனாக முன்னணி கதாபாத்திரத்திலும், புன்னகை பூ கீதா – மேதா வரதனாகவும், யாஷிகா ஆனந்த் – மாயா பிள்ளை என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
மிஸ்ட்ரி, சஸ்பென்ஸ், எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட இந்தப் படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு சிறந்த திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும்.
இதுவரை பார்த்திராத முற்றிலும் புதிதான ஒரு கதாபாத்திரத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிக்கிறார். லண்டனில் இருக்கக்கூடிய ஸ்டைலிஷான ஒரு காஸ்மெட்டிக் சர்ஜனாக வருகிறார்.
மலேசியாவில் வசிக்கும் திறமையான நடிகையும் ஆர்.ஜே.வுமான புன்னகை பூ கீதா இந்தப் படம் மூலம் மீண்டும் பெரிய திரைக்கு வருகிறார்.
இயக்குநர் வினய் பரத்வாஜ் தமிழ் சினிமாவில் இயக்குநராக நுழைவதற்கு முன்பு கன்னட சினிமாவில் அவர் இயக்கிய ‘முண்டினா நில்டானா’ என்ற படம் பெரும் வெற்றிப் பெற்று ரசிகர்களின் இதயம் கவர்ந்தது.
இதுமட்டுமல்லாது, ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகி ஹிட்டான சர்வதேச அளவில் புகழ்பெற்ற டாக் ஷோவான ‘ஸ்டார் டாக் வித் வினய் – சவுத் மீட் நார்த்’ ஷோவின் தொகுப்பாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘சில நொடிகளில்’ திரைப்படத்தின் கதை, ராஜ் வரதனின் வாழ்க்கையை சுற்றி நடக்கிறது. அவனது மாடல் கேர்ள் ஃபிரண்டான மாயா பிள்ளை அதிக அளவு போதை மருந்து உட்கொண்டு பரிதாபமாக உயிரிழக்கும்போது இவனது வாழ்வு சிக்கலுக்குள்ளாகிறது.

இதன் பின்னால் இருக்கும் மர்மம் என்ன, எதிர்பாராத திருப்பங்கள், தனது மனைவி மேதா வரதனிடம் இருந்து அவன் என்ன ரகசியங்களைப் பெற்றான், அவனது வாழ்வு மீண்டும் இயல்புக்குத் திரும்பியதா போன்ற கேள்விகளுக்கு இந்தப் படம் பதில் சொல்லும்.
புன்னகை பூ கீதா மற்றும் எஸ்குயர் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சில நொடிகளில்’ உலகளவில் பார்வையாளர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.