‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் ரஜினிகாந்த். 160 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழும் ரஜினியின் செண்டிமெண்ட், ஆக்ஷன் என எல்லா காட்சிகளிலும் ரசிகர்கள் பார்ப்பது ஒன்றை தான் அவரின் ஸ்டைலைதான்.
ஒரு சில படங்களில் ரஜினி தனது வழக்கமான நடிப்பில் இருந்து விலகி கதாபாத்திரத்திற்கு முக்கியத்தும் அளித்து நடித்துள்ளார்.
அந்த வகையில் மகேந்திரன் இயக்கிய ‘முள்ளும் மலரும்’ திரைப்படம் ரஜினிக்குள் இருக்கும் ஒரு தேர்ந்த நடிகரை வெளியேகொண்டு வந்த படங்களில் ஒன்று.
கடந்த 1978 ஆம் ஆண்டு மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘முள்ளும் மலரும்’.
தமிழ் சினிமாவில் எல்லா காலமும் கொண்டாடும் கிளாசிக் படங்கள் வரிசையில் இந்த படம் இருந்து வருகிறது. இந்த படத்தில் ஜெயலட்சுமி, ஷோபா, சரத்பாபு உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இளையராஜா இசையில் கண்ணதாசன் வரிகளில் இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டடித்தது.
அதிலும், ‘செந்தழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா’ பாடல் இன்றும் பட்டித் தொட்டி எங்கும் ஒலித்து வருகிறது.
அப்படிப் புகழ்பெற்ற பாடலில் இசையமைப்பாளர் கங்கை அமரன் சிறிய திருத்தம் செய்துள்ளார்.
இதுகுறித்து சினிமா விகடன் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த நேர்காணலில் பேசியவை:
“ ‘முள்ளும் மலரும்’ படத்தில் செந்தாழம் பூவில் உட்காரும் தென்றல் என் மீது மோதுதம்மா என்று தான் கண்ணதாசன் எழுதி இருந்தார்.
அப்போது நான், செந்தாழம் பூவில் உட்காரும் தென்றலுக்கு பதிலாக வந்தாடும் தென்றல் போட்டோல் சாஃப்டாக இருக்குமே என்று சொன்னேன். அதற்கு கண்ணதாசன் கரெக்ட்டு தான் அதையே போடுங்கள் என்றார்.
எழுத்தின் மேல் இருக்கும் ஆர்வத்தால் நாம் சொல்வது எல்லாம் கரெக்டாக இருக்கிறது.
இதுவரைக்கும் 1350 பாடல் எழுதியிருக்கிறேன். இன்னும் பாடல்கள் எழுதிக் கொண்டிருக்கிறேன்” என்று கூறினார்.
– நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்