பொக்கிஷம்:
‘இந்தக் காலத்தில் சில திரைப்படப் பாடல்களில் ‘காப்பி’ நெடி தூக்கலாக இருக்கிறது. ஆனால், அந்தக் காலத்திலேயே எம்.ஜி.ஆர். உங்களிடம் சில ரெக்கார்டுகளைக் கொடுத்து, ‘இது மாதிரி இசையமைத்துக் கொடுங்க’னு சொன்னாராமே… உண்மையா?”
‘மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. பதில்:-
‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்காக லொகேஷன் பார்க்க வெளிநாடுகளுக்குப் போன எம்.ஜி.ஆர்., ஒரு மூட்டை நிறைய ரிக்கார்டுகளும் கேசட்டுகளும் கொண்டுவந்து கொடுத்து, “விசு… இதை எல்லாம் கேட்டுப்பார். ஒரு ஐடியா கிடைக்கும்”னார்.
நான் அதை எல்லாம் ஒரு ஓரத்தில் ஒதுக்கிவெச்சுட்டு, “அண்ணே… நான் மெட்டுப் போட்டுத் தர்றேன். அதைக் கேட்டுட்டு அப்புறம் சொல்லுங்க”னு சொல்லி, கடகடனு நிறைய மெட்டு போட்டுக் கொடுத்தேன்.
அதையெல்லாம் கேட்டதுமே எம்.ஜி.ஆர். என்னைக் கட்டிப்புடிச்சுக் கிட்டார். அது எல்லாமே சூப்பர் ஹிட் மெட்டு ஆனதுதான் உங்களுக்கே தெரியுமே!
நன்றி – விகடன் பொக்கிஷம்