Take a fresh look at your lifestyle.

ஏ.ஆர்.எஸ். கார்டன் இலவசமாகக் கொடுக்கப்பட்ட இடமா?

சினிமா பிரபலம் விளக்கம்

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தைப் பிடித்து இன்றும் வாழ்ந்துகொண்டிருப்பவர் எம்.ஜி.ஆர். சினிமாவில், ஆட்சி செய்த அவர், ஒரு கட்டத்தில் தனி கட்சித் தொடங்கி அரசியலில் தொடர்ந்து 3 முறை முதல்வராக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தார்.

நடிகராக இருந்தபோது, அரசியலுக்கு வந்தபோதும், தனது வாழ்நாளில் பலருக்கு உதவி செய்துள்ள எம்.எஜி.ஆர் இன்றும் மக்கள் மத்தியில் நிலைத்திருக்கிறார்.

இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகைகளாக இருக்கும் ராதா மற்றும் அம்பிகா இருவரும் சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளனர்.

ராதா திருமணத்திற்குப் பிறகு நடிப்பில் இருந்து விலகி இருந்தாலும், அவரது சகோதரி அம்பிகா தற்போது சினிமாவில் முக்கியக் கேரக்டரில் நடித்து வருகிறார். சீரியல்களிலும் நடித்து திரைத்துறையில் தன்னை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, சென்னையில் ராதா அம்பிகா இருவரும் இணைந்து ஏ.ஆர்.எஸ். கார்டனை வாங்கியபோது, முதல்வர் எம்.ஜி.ஆர் அதனை அவர்களுக்கு இலவசமாக கொடுத்ததாகவும், இன்றைய மதிப்பில் அந்த இடம் பல ஆயிரம் கோடி போகும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இது குறித்து நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பி வரும் நிலையில், நடிகரும் இயக்குநருமான சித்ரா லட்சுமணன் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

ராதா, அம்பிகா அந்த ஏ.ஆ.எஸ். கார்டனை வாங்கியபோது தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தார். அப்போது அந்த இடத்தை அவர் இலசவமாக கொடுத்திருந்தால் அப்போது எதிர்கட்சியாக இருந்தவர்கள் சும்மா விட்டிருப்பார்களா, அதுவும் இல்லாமல், அந்த ஏ.ஆர்.எஸ். கார்டன், அரசு நிலம் இல்லை.

தனியாருக்குச் சொந்தமான நிலம். அந்த தனியாரிடம் இருந்துதான் ராதா அந்த இடத்தை வாங்கினார். இந்த இடத்திற்கு அருகில் இருக்கும் இடத்தை வாங்கியவர் இயக்குநர் பாரதிராஜா. இருவரும் இணைந்துதான் அந்த இடத்தை வாங்கினார்கள்.

இந்த இடம் மொத்தமாக ஒன்னே முக்கால் ஏக்கர்தான். இன்றையக் காலக்கட்டத்தில் இந்த ஒண்ணே முக்கால் ஏக்கர் எப்படிப் பல ஆயிரம் கோடி போகும்? என்று சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார். இந்த விளக்கம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நன்றி: தமிழச்சி கயல்விழி.