நடிகர் அஜித்குமாரின் ‘விடாமுயற்சி’ படத்தின் டைட்டில் லுக் மற்றும் ஒரு போஸ்டர் வெளியான நிலையில், அதன் சாட்டிலைட், டிஜிட்டல், ஆடியோ உரிமைகள் அதிக விலைக்கு விற்பனையாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார் அஜித் குமார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார்.
அர்ஜூன், ரெஜினா கெஸாண்ட்ரா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் சாட்டிலைட் உரிமை சன் டிவிக்கும், டிஜிட்டல் உரிமை நெட்ஃபிளிக்ஸ்க்கும், ஆடியோ உரிமை – சோனி மியூசிக் நிறுவனத்துக்கும் விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
– தேஜேஷ்