Take a fresh look at your lifestyle.

பிரம்மாண்டமாக விலை போன ‘வேட்டையன்’!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’ திரைப்படம் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகள் விற்பனையில் அமோக வசூலை ஈட்டியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் முடிவடைந்தது. இப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி பிரமாண்டமாக வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

தற்போது ‘வேட்டையன்’ திரைப்படம் திரையுலகிலும், வர்த்தக வட்டாரத்திலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘வேட்டையன்’ படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை முறையே சன் டிவி மற்றும் அமேசான் பிரைம் வீடியோ பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாட்டிலைட் உரிமை 65 கோடி ரூபாய்க்கும், டிஜிட்டல் உரிமை 90 கோடி ரூபாய்க்கும் விற்கப்பட்டதாக செய்திகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தை டி.ஜே.ஞானவேல் இயக்குகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ஜி.எம்.சுந்தர் மற்றும் பலர் அடங்கிய நட்சத்திரப் பட்டாளமே ‘வேட்டையன்’ படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். எஸ்ஆர் கதிர் ஒளிப்பதிவும், பிலோமின் ராஜ் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

– தேஜேஷ்