கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு மார்ச் 2023 இல் தொடங்கியது. ‘சூது கவ்வும்’ மற்றும் ‘காதலும் கடந்து போகும்’ படங்களை இயக்கிய நலன் குமாரசாமி எழுதி இயக்கியிருக்கும் இப்படம் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘வா வாத்தியார்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. ஜூன் மாத இறுதியில் கார்த்தி ‘வா வாத்தியார்’ படத்தை முடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே ஜூலை மாதத்தில் சர்தார் -2 படத்தில் கார்த்தி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கார்த்தி, கிருத்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்தராஜ், கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ள ‘வா வாத்தியார்’ தீவிர எம்ஜிஆர் ரசிகரின் குடும்பத்தைச் சுற்றி நடக்கும் கதை என கூறப்படுகிறது. அதோடு நல்ல பொழுதுபோக்கு படமாகவும் இந்தப் படம் உருவாகி வருதாகத் தெரிகிறது.
‘சர்தார் – 2’ – பி.எஸ். மித்ரன் இயக்கிய 2022 ஸ்பை த்ரில்லர் திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
– தேஜேஷ்.