Take a fresh look at your lifestyle.

மனதுக்குப் பிடித்த வேலையைச் செய்யுங்கள்!

மகிழ்ச்சியாக வாழ ஆலோசனை சொன்ன ராஷ்மிகா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தமிழில் கார்த்தி நடித்த ‘சுல்தான்’ படம் மூலம் அறிமுகமாகி, வாரிசு உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் முன்னணி நடிகையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் பத்திர்கை ஒன்றிற்காக கொடுத்த பேட்டியில், மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ சில யோசனைகளைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி இருந்தாலே மகிழ்ச்சியாக நாட்களை நகர்த்தலாம் என ராஷ்மிகா மந்தனா சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளார்.

“நல்ல உணவை சாப்பிடுங்கள். ஆரோக்கியமாக வாழ தரமான தூய்மையான உணவு முக்கியம். இனிப்பு சாப்பிடுவதால் ஆரோக்கிய பிரச்சினைகள் வரும்.

காலையில் எழுந்தவுடன் காபி குடிப்பது நல்லதல்ல என்று சிலர் சொல்வார்கள். ஆனால் கொஞ்சமாக காபி அருந்தலாம். அது உற்சாகம் தரும்.

பயணம் செய்வதற்கு வாய்ப்பு வரும்போது அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். புத்தகங்கள் படிப்பது நல்ல பழக்கம். உடலுக்கு தேவையான தூக்கம் அவசியம்.

விருப்பமில்லாத வேலையில் இறங்கி அதற்காக தினமும் கவலைப்பட்டுக் கொண்டிருப்பதைவிட மனதுக்கு பிடித்த பணியைச் செய்யுங்கள்.

மனதார சிரியுங்கள். சிலர் வாழ்க்கையில் சிரிப்பது என்பதையே மறந்துவிட்டு எப்போதும் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டிருப்பார்கள். அப்படிச் செய்யாதீர்கள்.

வாயில்லாப் பிராணிகளால் நமக்குள் இருக்கும் மன அழுத்தம், சோர்வு போய்விடும். எனக்கு எனது அவுரா நாய் குட்டியுடன் விளையாடுவது சந்தோஷத்தை தருகிறது” என்றார்.