பேசும் படம்:
1978-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவான திரைப்படம் ‘சிகப்பு ரோஜாக்கள்’.
இதில் கமல்ஹாசனுடன் ஸ்ரீதேவி, கே.பாக்யராஜ், கவுண்டமணி, வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இந்தப் படம் திரையரங்குகளில் 175 நாட்கள் மேல் வெற்றிகரமாக ஓடி வெள்ளி விழா கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா என மூன்று மாநிலத்திலும் வெள்ளி விழா கொண்டாடிய முதல் தமிழ்த் திரைப்படம் ‘சிகப்பு ரோஜாக்கள்’.
இப்படத்திற்கு பாரதிராஜா சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருதையும் கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றனர்.
‘சிகப்பு ரோஜாக்கள்’ படப்பிடிப்பின்போது ஜெமினி பிரிட்ஜ் துணிக் கடையில் எடுத்த புகைப்படம் இது. அதில் இயக்குநர் பாரதிராஜா மற்றும் நடிகர் கமல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நன்றி: புகைப்படம் உதவி ஞானம்