Take a fresh look at your lifestyle.

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!

பேசும் படம்:

கவிஞர் வாலி தன்னைப் புதிதாகச் சந்திக்க வருகிறவர்களிடம் கேட்கிற கேள்வி.
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்” என்ற பாடலை எழுதியது யார்?”

“எழுதின நீங்களே இப்படிக் கேட்கலாமா?”- என்று பதில் வந்தால் அவ்வளவு சந்தோஷம் அவருடைய முகத்தில் வெளிப்படும்.

இவருடைய பல பாடல்களுக்கு இசையமைத்தவரான எம்.எஸ்.வி.யே ஒரு விழாவில் ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் டி.எம்.எஸ் பாடிய “அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே” என்ற தனது பாடலைத் தவறுதலாக கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் என்று குறிப்பிட்டதும் அவரை போனில் அழைத்துச் செல்லமாக நினைவுபடுத்தியதை நெகிழ்வோடு சொல்வார் வாலி.

இந்தப் புகைப்படத்தில் வாலி, எம்.எஸ்.வி, டி.எம்.எஸ், பி.பி.எஸ் இணைந்திருக்கும் தருணம் ஒன்று.