பேசும் படம்:
‘பாவலர் சகோதரர்கள்’ என்றழைக்கப்பட்ட வரதராஜன், இளையராஜா, கங்கை அமரன் சகோதரர்களின் இசை தென் தமிழகத்திலும், கேரளாவிலும் பல இடங்களில் ஒலித்திருக்கிறது.
அப்போது அவர்கள் இயங்கியது பொதுவுடமைக் கட்சிச் சார்ந்த பார்வையுடன்.
அப்போது அந்தக் குழுவில் ஆர்மோனியம் வாசித்துப் பாடியவர் ராசய்யா என்ற இளையராஜா.
சென்னைக்கு வந்து பிரபலமான நிலையில் தனது சகோதரர்களுடன் அன்று மகிழ்ச்சியோடு எடுத்த புகைப்படம்.
உண்மையில் அருமையான இசை நிழல் தான்!