Take a fresh look at your lifestyle.

உலக அழகியின் எளிமை!

பேசும் படம்:

பிரபல நடிகையும் உலக அழகி என போற்றப்படும் ஐஸ்வர்யா ராய், 1994-ல் தன் 21-வது வயதிலேயே உலக உலக அழகிப் பட்டத்தைத் தட்டிச் சென்றவர்.

1997-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ‘இருவர்’ திரைபடத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமான ஐஸ்வர்யா ராய் இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

2007-ம் ஆண்டு இந்தி நடிகர் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார்.

ஐஸ்வர்யா ராய் தனது அனைத்து ஃபேஷன் ஷோவிலும் ‘ஹீல்ஸ் ஸ்லிப்பர்’ போட்டுக் கொண்டுக் கெத்தாக, நடையில் ஒரு மெல்லிய வளையுடனும் பார்ப்பவர்களை எளிதில் கவர்ந்துவிடுவார்.

50 வயதைக் கடந்த அழகி 2024-ம் ஆண்டு நடைபெற்ற loreal fashion walk-யில் தனக்கு 50 வயது இருப்பது என்று மனதில் துளி அளவும் இல்லாமல் இன்றும் தனக்கு 21 வயது தான் என்பதை நிரூபித்துக்காட்டினார்.

வருடந்தோறும் அமெரிக்காவில் நடக்கும் ‘ரெட் கார்பெட்’ நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளிலிருந்து புகழ்பெற்ற நடிகை, நடிகைகள் பங்கேற்பது வழக்கம்.

இதிலும் இன்றளவும் பார்வையாளர்களைக் கவர்வதில் முதலிடத்தில்தான் இருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.

அதிக பார்வையாளர்களைக் கவர்ந்த அழகி என்னும் பெயரை யாருக்கும் தராமல் தானே தக்க வைத்து வரும் ஐஸ்வர்யா ராய், உலகமே வியக்கும் பெண்ணாக இன்றும் மிளிர்கிறார் என்றால் அது மிகையல்ல.

குறிப்பு – கிரீடம் அணிந்து உலக அழகி பட்டத்துடன், ஐஸ்வர்யா ராய் எளிமையாக தரையில் அமர்ந்தபடி  தன்னுடைய தாயுடன் உணவு சாப்பிடும் புகைப்படக்காட்சி.