சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.650 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனைப் புரிந்தது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்பது குறித்த செய்திகள் இணையத்தில் கசிந்து வரும் நிலையில் நெல்சன் தனது பிறந்த நாளைக் கெண்டாடினார்.
அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் நிலையில் ரஜினியின் பிஆர்ஓ தனது சமூக வலைத்தளத்தில் நெல்சனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அப்போது, “பிளாக்பஸ்டர் இயக்குநர் நெல்சன் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள், நீங்கள் கதை சொல்லும் திறன் மற்றும் படைப்பாற்றல் எங்களை மிகவும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியதோடு, எங்களை உத்வேகமாகவும் வைத்திருக்கிறது.
நீங்கள் உருவாக்கும் படங்களைப் போலவே இந்த ஆண்டு நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்துகள். மேலும் இந்த ஆண்டு உங்களுக்கு மறக்க முடியாத தருணங்கள் நிறைந்த ஆண்டாக இருக்கட்டும்” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த வாழ்த்துகளிலிருந்து ‘ஜெயிலர் 2’ திரைப்படம் மறைமுகமாக உறுதி செய்யப்பட்டு விட்டதாகத் தெரிகிறது. ஏற்கனவே ‘ஜெயிலர் 2’ படத்தின் திரைக்கதையை நெல்சன் எழுதி வருவதாக கூறப்படும் நிலையில் விரைவில் இந்தப் படம் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
– தேஜேஷ்