தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ் தற்போது இவர் நடிக்கும் 25-வது படத்தைக் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ராகவா லாரன்ஸின் 25-வது படத்தை ரமேஷ் வர்மா இயக்குகிறார். இந்தப் படம் பிரமாண்ட பட்ஜெட்டில் அதிரடி சண்டை, சாகச் படமாக உருவாக இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகிறது. நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஹவ்விஷ் புரொடக்ஷனுடன் இணைந்து ஏ ஸ்டூடியோஸ். எல்.எல்.பி. பட நிறுவனம் சார்பில் கோனேரு சத்ய நாராயணா இந்தப் படத்தை தயாரிக்கிறார்.
இப்படத்தைக் குறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிவிப்பு போஸ்டரில் ராகவா லாரன்ஸின் நிழல் உருவம் இடம்பெற்றுள்ளது.
இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்தான விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும் எனவும் மேலும் இதன் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்க உள்ளது என தெரிவித்துள்ளது படக்குழு.
#ரமேஷ்_வர்மா #Ramesh_varma #ராகவா_லாரன்ஸ் #Raghava_Lawrence #25_வது #25_th_film #நீலாத்ரி_புரொடக்ஷன்ஸ் #Neeladri_Production #ஹவ்விஷ்_புரொடக்ஷன்ஸ் #Havvish_production #கோனேரு_சத்ய_நாராயணா #Koneru_satya_narayana