தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக திகழ்பவர் ராகவா லாரன்ஸ். இவருடைய நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
இதில் ராகவா லாரன்ஸூடன் எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் நட்ராஜன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும் ‘பென்ஸ்’ எனும் புதிய படத்தில் நடிக்க உள்ளார் ராகவா லாரன்ஸ்.
இதற்கிடையில், ‘காஞ்சனா – 4’ ம் பாகத்தையும் இயக்க உள்ளார். இதையடுத்து வெங்கட் மோகன் இயக்கும் ‘ஹண்டர்’ படத்திலும் அதைத்தொடர்ந்து, அறிமுக இயக்குநரான துரை செந்தில் குமார் இயக்கத்தில் ‘அதிகாரம்’ படத்திலும் நடிக்க இருக்கிறார்.
அதைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கத்தில் ராகவா லாரன்ஸ தனது 25-வது படத்திலும் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘ஆர்.எல் 25’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று ராகவா லாரன்ஸ் 47-வது பிறந்தநாளை முன்னிட்டு, ‘ஆர்.எல் – 25’ படத்தின் முதல் பார்வை போஸ்டருடன் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு ‘கால பைரவா’ என அதிகாரப்பூர்வமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
தற்போது இப்படத்தின் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.