Take a fresh look at your lifestyle.

டிசம்பரில் வெளியாகிறது ‘புஷ்பா-2’!

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி வெளியான திரைப்படம் ‘புஷ்பா’.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியானது. கிட்டத்தட்ட ரூ.350 கோடி மேல் இந்தத் திரைப்படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.

இதனையடுத்து, இந்தத் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. ‘புஷ்பா-2 தி ரூல்’ என்ற தலைப்பில் உருவாகி வருகிறது.

ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தத் திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், ‘புஷ்பா-2’ ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 6 மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையே திரைப்படத்தின் முன்னோட்ட பாடல் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், திரைப்படத்தை திட்டமிட்ட நாளில் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ‘புஷ்பா 2’ திரைப்படம் டிசம்பர் 6-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.