Take a fresh look at your lifestyle.

விக்னேஷ் – பிரதீப் கூட்டணியில் புதிய படம்!

பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே பட வெற்றிக்குப் பிறகு, விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்க இருந்த நிலையில், தற்போது லியோ படத்தை தயாரித்த 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரிக்க உள்ளது.

ஜான்வி கபூரை கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நீண்ட நாட்களாக இப்படத்தில் எழுத்துப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

– தேஜேஷ்