Take a fresh look at your lifestyle.

பிதா: 23 மணிநேரம் 23 நிமிடங்களில் எடுக்கப்பட்ட சாதனைப் படம்!

இந்தியத் திரைப்பட வரலாற்றில், 23 மணி நேரம் 23 நிமிடத்தில் எடுத்து முடிக்கப்பட்ட முதல் திரைப்படம் என்ற சாதனையைப் படைக்கவுள்ளது ‘பிதா’. இப்படத்தை இயக்குநர் எஸ்.சுகன் ஒரே இரவில் நடக்கும் கதையாக எடுத்துள்ளார்.

இந்தப் படம் ஜூலை 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. எஸ்.சுகன் இயக்கத்தில் உருவாகியுள்ள பிதா படத்தை, தரமான சிறு முதலீட்டு திரைப்படங்களைத் தொடர்ந்து வெளியிடும் ‘ஆக்‌ஷன் ரியாக்‌ஷன்’ சார்பில், உலகெங்கும் வெளியிடுகிறார் ஜெனீஷ்.

காது கேளாத, வாய் பேச முடியாத பத்து வயது சிறுவன் ஒருவன், கடத்தப்பட்ட தொழிலதிபரையும், தனது அக்காவையும் திருவிழா பெருங்கூட்டத்தில் எப்படிக் காப்பாற்றுகிறான் என்பது தான் கதை.

ஆயிரக்கணக்கானோர் கூடியிருக்கும் திருவிழாக் கூட்டத்தில் திட்டமிட்ட குறித்த நேரத்தில் படப்பிப்பை நடத்தி, பலரின் பாராட்டை பெற்றுள்ளார் இயக்குநர் எஸ்.சுகன்.

ஒரே இரவில் நடக்கும் கதையாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனின் அம்மா, காதலிக்கும் அக்கா, தொழிலதிபர் கடத்தல் என, குறுகிய நேரத்தில் சிறப்பாக காட்சிகளை இயக்கியுள்ளார் எஸ்.சுகன்.

ஆதேஷ் பாலா, சாம்ஸ், மாஸ்டர் தர்ஷித், ஸ்ரீராம் சந்திரசேகர், அனு கிருஷ்ணா, ரெஹனா, மாரீஸ் ராஜா, அருள்மணி ஆகியோர் நடித்துள்ளனர்.

விறுவிறுப்பான மங்காத்தா, சூது கவ்வும் பட பாணியில் இயக்கியுள்ளார் எஸ்.சுகன். வசனம் பாபா கென்னடி, ஒளிப்பதிவு இளையராஜா, இசை நரேஷ், எடிட்டர் ஸ்ரீவர்சன், கலை கே.பி. நந்து, மக்கள் தொடர்பு கோவிந்தராஜ், தயாரிப்பு எஸ்.ஆர்.பிலிம் பேக்டரி ஜி.சிவராஜ்.