Take a fresh look at your lifestyle.

சூர்யா விஜய் சேதுபதியின் ‘பீனிக்ஸ்’ பட ரீலிஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. அவரது மகன் சூர்யா, இவரும் திரையுலகில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே விஜய்சேதுபதியுடன் இணைந்து சிந்துபாத் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இந்நிலையில் அறிமுக இயக்குநர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘பீனிக்ஸ்’.

இந்தப் படத்தின் மூலம் அனல் அரசு இயக்குநராக அறிமுகமாகி உள்ளார்.

சாம் சி.எஸ். இசையமைக்கும் இந்தப் படத்தை பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், சம்பத், தேவதர்ஷினி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.

ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்தப் படத்தின் வெளியிட்டுத் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் வரும் நவம்பர் மாதம் 14-ம் தேதி திரைக்கு வருகிறது என படக்குழு அறிவித்துள்ளது.