Take a fresh look at your lifestyle.

தனுஷ் இயக்கும் 3வது படம்: ரசிகர்களிடம் கோரிக்கை வைத்த ஜி.வி!

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தில் 2002ம் ஆண்டு அறிமுகமானார். தற்போது தமிழின் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.

பாலிவுட், ஹாலிவுட் என நடிப்பில் தனுஷ் கலக்கி வருகிறார். நடிப்பு மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், இயக்குநராகவும் சிறப்பான பங்களிப்பை செய்து வருகிறார்.

தனுஷின் 50-வது திரைப்படமாக உருவாகியுள்ள ‘ராயன்’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தத் திரைப்படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர்.

கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படம் கடந்த 26ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில், அடுத்ததாக நடிகர் தனுஷ் இயக்கும் 3வது திரைப்படத்திற்கு ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்று படக்குழுவினர் பெயர் வைத்துள்ளனர்.

இந்தத் திரைப்படத்தில் கதாநாயகனாக பவிஷ் நடிக்கிறார். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன், ரம்யா ரங்கநாதன் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமானக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்க, வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அண்மையில் இந்தத் திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தனுஷ் குரலில் உருவான இப்படத்தின் முதல் பாடலை விரைவில் வெளியிடலாமா? என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.