Take a fresh look at your lifestyle.

இந்தியாவின் பெருமை மிக்க படங்களில் ஒன்றாக இருக்கும்!

‘ரெட் ஃப்ளவர்’ படம் குறித்து இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் நம்பிக்கை

இந்தியாவின் மிகச்சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸுன் தியாகத்திற்கும், தேசத்திற்கு அவர் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பிற்கும் மரியாதைச் செலுத்தும் வகையில் உருவாகியுள்ள படம் தான் ‘ரெட் ஃப்ளவர்’ அதன் இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன்.

“ரெட் ஃப்ளவர் என்ற தலைப்பு நேதாஜியின் மரபுடன் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் சுதந்திரத்தை வடிவமைத்த ரத்தம் மற்றும் துணிச்சலைக் குறிக்கிறது.

நேதாஜியை கௌரவிக்கும் காட்சிகள் படத்தில் ஒரு உணர்ச்சிபூர்வமான உச்சக்கட்டமாக இருக்கும், பார்வையாளர்களிடையே தேசபக்தியையும் தேசத்தின் பெருமையையும் உணர வைக்கும்” என்கிறார் இயக்குநர்.

இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள அதிரடி சண்டைக் காட்சிகள் பார்வையாளர்களை இருக்கைகளின் விளிம்பில் வைத்திருக்கும் என்றும், ரெட் ஃப்ளவர் திரைப்படம் இந்தியாவின் பெருமை மிக்க படங்களில் ஒன்றாக இருக்கும் நம்பிக்கையோடு சொல்கிறார் ஆண்ட்ரூ பாண்டியன்.

ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே. மாணிக்கம் பிரமாண்டமாகத் தயாரித்த, ரெட் ஃப்ளவர் படத்தில் விக்னேஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார், அவரது ஒரு கதாபாத்திரம் ஒரு அச்சமற்ற இந்திய ரகசிய ஏஜெண்டாக சித்தரிக்கப்படுகிறது.

“கொலை செய்வதற்கான உரிமம்” பெற்ற அவர், நாட்டின் இறையாண்மையை அச்சுறுத்தும் சக்திகளை எதிர்கொள்கிறார். மனிஷா ஜஷ்னானி கதாநாயகியாக நடிக்கிறார். வலுவான விவேகமுள்ள பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தில் இந்திய ஜனாதிபதியின் சக்திவாய்ந்த வேடத்தில் அடியெடுத்து வைக்கும் புதிய முகமான அல்மாஸ், கதையின் பிரம்மாண்டத்திற்கு மேலும் அழகுச் சேர்க்கிறார். Y.G. மகேந்திரன் பிரதமராக நடிக்க, நாசர் ராணுவ ஜெனரலாக நடித்துள்ளார்.

மூச்சடைக்க வைக்கும் போர் சண்டைக் காட்சியமைப்புகளும் படத்தின் பிரமாண்டமான மேக்கிங்கும் ரசிகர்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்பைப் பெறும் என்கிறார்கள் படக்குழுவினர்.