Take a fresh look at your lifestyle.

நயன்தாராவின் மண்ணாங்கட்டி படப்பிடிப்பு தொடக்கம்!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார்.

இவருடன் யோகிபாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன், நரேந்திர பிரசாத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது. நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தை டியூட் விக்கி எழுதி, இயக்கிறார்.

இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்த படத்துக்கான பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில், படப்பிடிப்பு கொடைக்கானலில் தொடங்கியதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

– தேஜேஷ்