ஆக்சன் கிங் அர்ஜூன் கதையில், இயக்குநர் AP அர்ஜூன் இயக்கத்தில், நடிகர் துருவா சர்ஜா நடிப்பில், பிரமாண்டமான பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ளது ‘மார்டின்’ திரைப்படம்.
இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 11ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் பிரம்மாண்டமாக திரைப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சிகளைத் துவங்கியுள்ளனர்.
இதன் முதல் கட்டமாகப் படக்குழுவினர், தமிழ்ப் பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில், சென்னையில் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.
இவ்விழாவினில், தயாரிப்பாளர் உதய் K மேத்தா, ஆக்சன் கிங் அர்ஜூன், கதாநாயகன் துருவா சர்ஜா, கதாநாயகி வைபவி உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய நடிகர் துருவா சர்ஜா “தமிழில் எனக்கு 2வது திரைப்படம், ‘செம்ம திமிரு’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே போல், ‘மார்டின்’ படத்திற்கும் நல்ல ஆதரவைத் தாருங்கள்.
இந்தப்படத்தில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்கும் என் நன்றி.
இந்தப்படத்தை முழுமையான ஆக்சன் திரைப்படமாக, புதிய தளத்தில் இருக்கும்படியான, படைப்பாக எடுத்துள்ளோம். உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி” என தெரிவித்தார்.



