விஷாலின் 33-வது படமாக மார்க் ஆண்டனி திரைப்படம் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பஹீரா ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கி உள்ளார்.
நடிகை ரித்து வர்மா நாயகியாக நடித்துள்ளார். அதோடு எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், தெலுங்கு நடிகர் சுனில், மலேசிய நடிகர் டிஎஸ்ஜி, நடிகை அபிநயா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வர, 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை வாரிக் குவித்தது.
இந்நிலையில் இத்திரைப்படம் நாளை ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது.
– தேஜேஷ்