Take a fresh look at your lifestyle.

மீண்டும் தள்ளிப்போன மார்கழி திங்கள் ரிலீஸ்!

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் மூலம் நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.

பாரதிராஜா இயக்கிய ‘தாஜ்மஹால்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், தான் இயக்குநராக அவதாரம் எடுக்கும் முதல் படத்திலேயே தனது தந்தையை இயக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இப்படத்திற்காக 31 ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜாவும் இசைஞானி இளையராஜாவும் இணைந்துள்ளனர். அவர்கள் இருவரும் கடைசியாக இணைந்து பணியாற்றிய திரைப்படம் ‘நாடோடித் தென்றல்’. தற்போது ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்திற்காக இருவரும் இணைந்துள்ளனர்.

இந்நிலையில் இத்திரைப்படம் கடந்த அக்டோபர் 5-ம் தேதி வெளியாக இருந்த நிலையில் அக்டோபர் 20-ம் தேதிக்கு தள்ளிப்போவதாக படக்குழு அறிவித்தது. தற்போது மீண்டும் தள்ளிப்போவதாக அறிவித்த நிலையில் புதிய தேதியாக அக்டோபர் 27-ம் தேதி வெளியாகும் என்று தெரிவித்துள்ளது.

– தேஜேஷ்