Take a fresh look at your lifestyle.

வெளியானது ‘மார்கழித் திங்கள்’ படத்தின் முதல் பாடல்!

பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் இயக்கும் ‘மார்கழித் திங்கள்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. ‘தாஜ்மஹால்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மனோஜ் பாரதிராஜா மார்கழித் திங்கள் திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிறார்.

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படம் அக்டோபர் 5ம் தேதி வெளியாகிறது. பாரதிராஜா நடித்துள்ள மார்கழித் திங்கள் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். 31 ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜா – இளையராஜா இணைந்து இந்தப் படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

– தேஜேஷ்