Take a fresh look at your lifestyle.

கல்லூரிப் பாடத்தில் இடம்பெற்ற மம்முட்டி!

கல்லூரி மாணவர்களுக்கான பாடத்தில் மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மம்முட்டி பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளது.

எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜா கல்லூரியில் பி.ஏ. வரலாறு  பிரிவு மாணவர்களின் பாடத்தில் மம்முட்டி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாமாண்டு மாணவர்கள் தாங்களாகத் தேர்வு செய்து படிக்கிற பாடப்பிரிவுகளில் ஒன்றான ‘மலையாள சினிமா வரலாறு’ பாடத்தில் அவரைப் பற்றிய குறிப்புகள் இடம்பிடித்துள்ளன. 

எர்ணாகுளம் அரசு சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி. பயில்வதற்கு முன்னர் மகாராஜா கல்லூரியில் படித்தவர் மம்முட்டி.

தான் படித்த கல்லூரியிலேயே தன்னைப் பற்றி மாணவர்கள் பாடமாகப் பயில்வது கவுரவம். அந்த கவுரவம் மம்முட்டிக்குக் கிடைத்துள்ளது.

– பாப்பாங்குளம் பாரதி.